உக்ரைன் போருக்கு அரசியல்ரீதியான தீர்வு - புதின் ஜின்பிங் கூட்டறிக்கை

May 17, 2024

உக்ரைன் போருக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என புதின் - ஜின்பிங் கூட்டறிக்கை கூறுகிறது. ரஷ்ய அதிபர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்படுவதாவது ரஷ்யா, சீனா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எங்களுடைய நட்பு மற்றும் இறையாண்மை மீதான பிற […]

உக்ரைன் போருக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என புதின் - ஜின்பிங் கூட்டறிக்கை கூறுகிறது.

ரஷ்ய அதிபர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்படுவதாவது ரஷ்யா, சீனா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எங்களுடைய நட்பு மற்றும் இறையாண்மை மீதான பிற நாடுகளின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். உக்ரைன் போருக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும். இதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும்.

எங்கள் நாடுகளுக்கு இடையே உள்ள நட்பு பரஸ்பர ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக உள்ளது. ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சந்தர்ப்பவாதம் அல்ல. எங்களுடைய ஒத்துழைப்பு சர்வதேச அரசியலை சமய நிலைப்படுத்தும். எங்களுடைய உறவு அண்டை நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாக திகழ்கிறது என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu