ஐபிஎல் 2024 நேற்றைய தொடர் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற இருந்தது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டம் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டதை தொடர்ந்து புள்ளிகள் அடிப்படையில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளது.