சத்தீஸ்கரில் ஆட்களை ஏற்றிச் செல்லும் பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சதீஷ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழு பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்வானி அருகே 20 அடி ஆழமுள்ள பாலத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்