மூன்று நட்சத்திரக் கூட்டமைப்பை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி

விண்வெளியில் உள்ள பல்வேறு விண்மீன் கூட்டங்களை ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அந்த வகையில், புதிதாக 3 நட்சத்திரங்கள் கொண்ட கூட்டமைப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து சுமார் 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள HP Tau, HP Tau G2, மற்றும் HP Tau G3 ஆகிய 3 விண்மீன்களை கொண்ட கூட்டமைப்பு HP Tau என்று அழைக்கப்படுகிறது. இதன் வயது 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது நமது சூரியனைப் […]

விண்வெளியில் உள்ள பல்வேறு விண்மீன் கூட்டங்களை ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அந்த வகையில், புதிதாக 3 நட்சத்திரங்கள் கொண்ட கூட்டமைப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள HP Tau, HP Tau G2, மற்றும் HP Tau G3 ஆகிய 3 விண்மீன்களை கொண்ட கூட்டமைப்பு HP Tau என்று அழைக்கப்படுகிறது. இதன் வயது 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது நமது சூரியனைப் போல உருமாறும் பயணத்தில் உள்ளது. இன்னும் இதில் அணு இணைவு ஆரம்பமாகவில்லை. மிகவும் இளமையாக உள்ளது, மேலும், இதிலிருந்து வெளிப்படும் ஒளி இதன் சொந்த ஒளி அல்ல. ஒரு கண்ணாடியைப் போல விண்வெளியில் இருந்து கிரகிக்கப்பட்ட ஒளியை இது பிரதிபலிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu