பார்வை இழந்தோருக்கான ஏஐ கண்ணாடி

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வை குறைபாட்டை இதனால் சரி செய்ய முடியாது என்றாலும் பார்வையற்றோருக்கான வாழ்வியல் முறைகளை எளிமைப்படுத்துவதற்கு உதவும். முழுமையாக பார்வை திறன் இல்லாதவர்கள், குறைந்த பார்வை திறன் கொண்டவர்கள் ஆகிய இருவருக்குமே பயன்படும் வகையில் புதிய கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி, லோ விஷன் கிளாஸ் என அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சாதாரண கண் கண்ணாடிகள் […]

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வை குறைபாட்டை இதனால் சரி செய்ய முடியாது என்றாலும் பார்வையற்றோருக்கான வாழ்வியல் முறைகளை எளிமைப்படுத்துவதற்கு உதவும்.

முழுமையாக பார்வை திறன் இல்லாதவர்கள், குறைந்த பார்வை திறன் கொண்டவர்கள் ஆகிய இருவருக்குமே பயன்படும் வகையில் புதிய கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி, லோ விஷன் கிளாஸ் என அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சாதாரண கண் கண்ணாடிகள் போலவே இது இருக்கிறது. இதன் ஓரத்தில் சிறிய பெட்டி போன்ற அமைப்பு உள்ளது. கண்ணாடிக்கு முன்பு ரூபாய் நோட்டுகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை காண்பித்து, அதை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட அந்த பொருட்களை கண்ணாடி முன்பு காண்பித்தால் அதைப் பற்றிய விவரங்களை குரல் ஒலியாக வெளிப்படுத்துகிறது. ஒரு நபர் பற்றிய விவரங்களை உள்ளீடு செய்வதற்கு, அவருடைய புகைப்படத்தை காண்பித்து தகவல்களை உள்ளீடு செய்து கொள்ளலாம். மேலும், அதில் உள்ள சென்சார் மூலம், எதிரே உள்ள தடுப்புகள் அடையாளம் காணப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu