சென்னையில் ஊடுருவிய நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது

பாஜக தலைவர்களை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாக கடந்த 18ஆம் தேதி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ரயில் அல்லது விமானங்களில் குஜராத்திற்கு வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட […]

பாஜக தலைவர்களை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாக கடந்த 18ஆம் தேதி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ரயில் அல்லது விமானங்களில் குஜராத்திற்கு வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக நான்கு ஐஏஎஸ் பயங்கரவாதிகள் விமானத்தில் குஜராத்திற்கு வர இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடியே நான்கு ஐஏஎஸ் பயங்கரவாதிகள் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நான்கு பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றுவளைத்து கைது செய்தனர். நான்கு பேரும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். அதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நான்கு பேரும் குஜராத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu