ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வரும் எல் வி எம் எச் நிறுவனம் சீனாவின் அலிபாபா நிறுவனத்துடன் கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது. சீனாவில் தனது இருப்பை தக்க வைப்பதற்காக இந்த கூட்டணியை மேற்கொண்டுள்ளது.
எல் வி எம் எச் மற்றும் அலிபாபா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அலிபாபாவின் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை எல் வி எம் எச் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், அலிபாபா ஏற்படுத்தி உள்ள சீனாவின் விநியோகச் சங்கிலி கட்டமைப்பை எல் வி எம் எச் பயன்படுத்திக் கொள்ளும். அது மட்டுமின்றி, உள்நாட்டு சந்தையில் போட்டி நிறுவனங்களை தாண்டி சாதனை படைக்க திட்டமிட்டுள்ள அலிபாபா நிறுவனத்திற்கு இந்த கூட்டணி வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.