உலகெங்கும் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி - வியக்க வைக்கும் ஆய்வு முடிவு

உலகெங்கும் கரப்பான் பூச்சிகள் எப்படி பரவின என்பது பற்றி அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை விடை அளிக்கிறது. உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகை கரப்பான் பூச்சிகளின் மரபணுவை சோதனை செய்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி இனம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மேற்கு நோக்கி பரவியதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து 2100 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம் உருவாகி இருக்கலாம் […]

உலகெங்கும் கரப்பான் பூச்சிகள் எப்படி பரவின என்பது பற்றி அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை விடை அளிக்கிறது. உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகை கரப்பான் பூச்சிகளின் மரபணுவை சோதனை செய்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி இனம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மேற்கு நோக்கி பரவியதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து 2100 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம் உருவாகி இருக்கலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு பரவிய கரப்பான் பூச்சி இனம், 270 ஆண்டுகளுக்கு முன்பு பெருவாரியாக பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனி வீரர்கள் மூலம் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அறிக்கை கூறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu