ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை கொண்டு சென்ற வாகனத்தை மக்கள் சூழ்ந்தனர். இந்த இறுதி அஞ்சலி ஈரானின் உயர்மட்ட தலைவரான அயதுல்லா அலி கமேனி முன்பாக நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஊர்வலம் விடுதலை சதுக்கம் வரை சென்றது. இந்த விபத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈரானில் ஐந்து நாட்கள் துக்கம் கடைபிடிக்க கமேனி உத்தரவிட்டுள்ளார். இந்த ஊர்வலத்தில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள், ராணுவ தளபதிகள் கலந்து கொண்டனர். இன்று அதிபரின் உடல் அவரது சொந்த ஊரான மசாத்தில் அடக்கம் செய்யப்படுகின்றது. அதிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வசதியாக மக்களுக்காக தெஹ்ரான் முதல் மசாத் வரை அந்நாட்டு அரசு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.














