உள்ளிருந்து உருகும் நிலையில் இருக்கும் வினோத கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோள் பற்றிய விரிவான தகவல்கள் லைவ் சயின்ஸ் மற்றும் தி அஸ்ட்ரானமிக்கல் இதழ்களில் வெளியாகியுள்ளது.
TOI-6713.01 என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோளில் அதிகமான எரிமலை சீற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், சிவப்பு நிறத்தில் எரியும் கோளமாக இது காட்சி தருகிறது. இதற்கு முன்பு இத்தகைய தன்மையுடன் எந்தக் கோளும் கண்டுபிடிக்கப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பூமியிலிருந்து 66 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி இந்த கோள் வலம் வருகிறது. பூமியை விட அளவில் சற்று பெரியதாக உள்ள இந்த கிரகம், 2.2 பூமி நாட்களில் சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்கிறது. இந்தக் கோளின் வெப்பநிலை 4200 பாரன்ஹீட் ஆகும்.