சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
கேரள மாநில இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து பொதுமக்களும்,விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில்
மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்துவதற்காக கேரளா அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கேரளா அரசு சார்பில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக கலிங்கு தான் அமைக்கப்பட்ட வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதுவாகினும் உரிய அனுமதி பெற்ற பின் தான் மேற்கொள்ள வேண்டும் என கேரளா அரசுக்கு உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணையை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது














