மத்திய ரிசர்வ் வங்கி வகுத்த வழிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் எஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் சேவைகளை முறையாக பூர்த்தி செய்யாத காரணத்தால் எஸ் வங்கிக்கு 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இருப்பு உள்ளதை உறுதி செய்யாததும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், கடன் வழங்கல் தொடர்பான விவகாரங்களில் ஐசிஐசிஐ வங்கி வழிமுறைகளை பின்பற்றவில்லை என மத்திய ரிசர்வ் வங்கி குற்றம் சுமத்தி உள்ளது. எனவே, ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட வங்கிகளின் செயல்பாடுகள் மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பாதிப்படையாது என தெளிவுபடுத்தி உள்ளது.