கடந்த 8ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 8ம் தேதியிலிருந்து இன்று வரை நடைபெற்றது. பொதுவாக கத்திரி வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 100 டிகிரியை தாண்டி பல்வேறு நகரங்களில் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் கத்திரி வெயில் தொடங்கிய நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பஅலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதன்படி கடந்த 8ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்தது. மேலும் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்றுடன் கத்திரி வெயில் நிறைவடைகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலில் தாக்கம்














