பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவராக இருந்தார். பனாமா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகள் அங்கு இருந்துவிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நவாஸ்-ன் கட்சி பெனாசீர் போட்டோவின் மகன் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நவாஸ் சகோதரர் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நவாஸ் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.