கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 30768 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 55% உயர்வாகும்.
கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், அதானி குழுமத்தின் எபிட்டா மதிப்பு கிட்டத்தட்ட 40% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், அதானி குழுமத்தின் எபிட்டா 660 பில்லியன் ரூபாய் ஆகும். அதே வேளையில், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு 2.2 ட்ரில்லியன் ரூபாய் ஆகும். அதானி குடும்பத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளன. இதனால், பிரபல பங்கு சந்தை ஆலோசனை நிறுவனமான ஜெஃப்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.