கேரள மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக முன்பே தொடங்கிவிட்டது. இதனால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. தற்போது பருவமழையுடன் தென்கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி உருவாகியுள்ளதால் மாநிலம் முழுவதும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு கோழிக்கொடு கடற்கரையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்