முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலர்கள். அதாவது 9.21 லட்சம் கோடி ஆகும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலர்கள். அதாவது 9 லட்சம் கோடி ஆகும். அதன்படி, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தில் உள்ளார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி பதினோராம் இடத்திலும் முகேஷ் அம்பானி பனிரெண்டாம் இடத்திலும் உள்ளனர். ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதானி குழுமத்திற்கு சாதகமாக வெளியானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்று வருகின்றன. அதன்படி, அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக் கணிப்பால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன.














