ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த வினோத உயிரினத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியா கண்டத்தில் எக்கிட்னாபஸ் என்ற வினோத உயிரினம் முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த உயிரினத்தின் தடயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்கு நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் எக்கிட்னாபஸ் உயிரினத்தின் புதைப்படிவ எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மோனோட்ரீம் என்ற உயிரினத்தின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எக்கிட்னாபஸ் என்று அழைக்கப்படும் உயிரினத்தின் அறிவியல் பெயர் ஓபலியோஸ் ஸ்ப்ளென்டென்ஸ் (Opalios splendens) ஆகும். முற்கால ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்திய உயிரினமாக இது […]

ஆஸ்திரேலியா கண்டத்தில் எக்கிட்னாபஸ் என்ற வினோத உயிரினம் முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த உயிரினத்தின் தடயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் எக்கிட்னாபஸ் உயிரினத்தின் புதைப்படிவ எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மோனோட்ரீம் என்ற உயிரினத்தின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எக்கிட்னாபஸ் என்று அழைக்கப்படும் உயிரினத்தின் அறிவியல் பெயர் ஓபலியோஸ் ஸ்ப்ளென்டென்ஸ் (Opalios splendens) ஆகும். முற்கால ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்திய உயிரினமாக இது இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்கள் இதன் தொன்மையை கண்டறிந்துள்ளனர். இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்துள்ளது. இவற்றை மற்ற பழங்கால விலங்குகளின் புதைப்படிவ எச்சங்களுடன் ஒப்பிட்டு பார்த்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu