வர்த்தக முறையை இறுதி செய்ய யூசிஓ, யெஸ் வங்கி ஆகியவை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

October 20, 2022

யூகோ வங்கி, யெஸ் வங்கி ஆகிய இ௫வங்கிகளும் இந்தியா - ரஷ்யா இடையேயான பணப்பரிவர்த்தணை செய்யும் முறைக்காக ரஷ்ய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக பெரிய கடன் வழங்குநர்கள் ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகப் பரிவர்த்தனை செய்யத் தயங்குவதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் UCO மற்றும் Yes Bank போன்ற சிறிய வங்கிகளை இந்தியா நம்புகிறது. அதனடிப்படையில் பணம் செலுத்தும் முறையை பற்றி வங்கிகள் விவாதித்து […]

யூகோ வங்கி, யெஸ் வங்கி ஆகிய இ௫வங்கிகளும் இந்தியா - ரஷ்யா இடையேயான பணப்பரிவர்த்தணை செய்யும் முறைக்காக ரஷ்ய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக பெரிய கடன் வழங்குநர்கள் ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகப் பரிவர்த்தனை செய்யத் தயங்குவதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் UCO மற்றும் Yes Bank போன்ற சிறிய வங்கிகளை இந்தியா நம்புகிறது. அதனடிப்படையில் பணம் செலுத்தும் முறையை பற்றி வங்கிகள் விவாதித்து வருகின்றன.

மேலும் இதில் ஏற்கப்படும் நாணய முறையாக ரஷ்ய ரூபிள் அல்லது சவுதி அரேபியாவின் ரியாலுடன் இணைக்கப்பட்ட இந்திய ரூபாய் அடங்கும் என்று ஒ௫ அதிகாரி கூறினார். ஆனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்தைத் நிறைவுசெய்வதற்கு ரூபாய்-ரியால் வழிமுறை எவ்வாறு வடிவமைக்கப்படும் என்பதை அந்த அதிகாரி விளக்கமாகக் ௯றவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu