இந்தியாவின் பிரதமராக 3வது முறை நரேந்திர மோடி பதவியேற்று கொண்டார். அதன் பிறகு, தனது முதல் கையெழுத்தை விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்தில் இட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், 20000 கோடி ரூபாய் தொகையை விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார். பிஎம் கிசான் நிதி திட்டத்தில் கிட்டத்தட்ட 9.3 கோடி விவசாயிகள் பயனடைவர் என சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நிதி வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் சார்ந்த நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தனது அரசு முன்னுரிமை வழங்கி செயல்படும் என்று கூறினார்.














