ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்ல உள்ளார். மேலும், கடந்த 24 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் புதினின் முதல் வடகொரியா பயணம் இது என குறிப்பிடப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா போருக்கு, ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியா வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதே வேளையில், ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பங்கள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














