கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பூமியின் உட்பகுதியானது மெதுவாக சுழன்று வருவதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வினாடியின் பின்னம் அளவுக்கு ஒரு நாளின் நீளம் மாற்றமடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் உட்பகுதியானது இரும்பு நிக்கல் போன்ற திடப்பொருட்களால் ஆனது. அதனைச் சுற்றி திரவ வடிவில் எரிமலை குழம்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு மனிதர்களால் செல்ல முடியாது. அதனால், பூகம்பத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி மூலம் பூமியின் உட்பகுதி பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக உட்பகுதி மெதுவாக சுழல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விஞ்ஞானிகள் இடையே விவாதங்கள் எழுந்த நிலையில், இறுதியில், இது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.