ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரோகித் குமார் குப்தா தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இந்த செய்தி வெளியானதன் விளைவாக, ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் 4% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில், ஜீ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 154 ரூபாய் அளவில் உள்ளது.
ரோஹித் குமார் குப்தா பதவியில் இருந்து விலகி உள்ளதால், முகுந்த் கல்கலி என்பவர் பொறுப்பு தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஜீ குழுமத்தில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.














