லிதுவேனியாவில் மூன்றாவது நாட்டு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு 87 எம்பிக்கள் ஆதரவளித்துள்ளனர். ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எட்டு எம் பி கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமானது வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களின் இடம்பெயர்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி ஐரோப்பிய நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து ஆண்டிற்கு 40 ஆயிரம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதோடு வெளிநாட்டு தொழிலாளர்கள், நிறுவனத்திற்கான தேவை, தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் போன்றவை கடுமையாகப்பட்டுள்ளன. லிதுவேனியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெளிநாட்டினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக பெலாரஸ் நாட்டில் இருந்து அதிகம் பேர் வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.