இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக உலக வங்கி 12,500 கோடி நிதி அளிக்க உள்ளது.
இலங்கையில் உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் குழு திங்கள் அன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார நிலையங்களை மக்கள் குறைந்த அளவிலேயே தேடி வருகின்றனர். அவற்றால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க இயலவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உலக வங்கியின் ஆதரவில் 550 சுகாதார நிலையங்கள் பல்வேறு மருத்துவ வசதிகளை பெற்று நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டம் மூலம் 1000க்கும் அதிகமான சுகாதார நிலையங்களில் சேவைகள் மேம்படுத்தப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.