புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத 33 பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் இல்லாமல் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றது. அதில் முதல் கட்டமாக 33 தனியார் பள்ளிகளை மூட கடந்த டிசம்பர் 15ஆம் தேதி புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் குழந்தைகளை அங்கு சேர்க்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் கட்டமாக 33 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட கல்வித்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும் உரிய அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடத்தினால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வந்தால் ஒவ்வொரு நாளும் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது