ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திடப்பொருள் பேட்டரியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலான மின்சார இருசக்கர வாகனங்களை ஓலா எலெக்ட்ரிக் தயாரித்துள்ளது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் திடப்பொருள் பேட்டரி பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். “இது முழுமையாக வெற்றி பெறும் பட்சத்தில் ஓலா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதன் சொந்த தயாரிப்பில் வெளியாகும் பேட்டரிகள் பயன்படுத்தப்படும். தற்போதைய நிலையில், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பேட்டரிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டில், ஓலா நிறுவனத்தின் சொந்த பேட்டரிகள் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.