உலகின் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரித்து இந்தியா சாதனை

உலகின் சக்தி வாய்ந்த வெடிகுண்டை தயாரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. நாக்பூரைச் சேர்ந்த எக்கனாமிக் எக்ஸ்பிளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள செபக்ஸ் 2 என்று அழைக்கப்படும் இந்த வெடிகுண்டை வாங்குவதற்கு பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில், இந்தியாவின் அதிசக்தி வாய்ந்த பிரமோஸ் போன்ற ஏவுகணைகளில் ஹேமக்ஸ் என்ற வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 1.5 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாகும். இந்தியாவின் மற்ற ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் போன்ற வெடி […]

உலகின் சக்தி வாய்ந்த வெடிகுண்டை தயாரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. நாக்பூரைச் சேர்ந்த எக்கனாமிக் எக்ஸ்பிளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள செபக்ஸ் 2 என்று அழைக்கப்படும் இந்த வெடிகுண்டை வாங்குவதற்கு பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலையில், இந்தியாவின் அதிசக்தி வாய்ந்த பிரமோஸ் போன்ற ஏவுகணைகளில் ஹேமக்ஸ் என்ற வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 1.5 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாகும். இந்தியாவின் மற்ற ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் போன்ற வெடி மருந்துகள் டிஎன்டியை விட 1.3 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாகும். இந்த நிலையில், செபக்ஸ் 2 வெடிகுண்டு 2.5 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிஎன்டி உடன் ஒப்பிடுகையில், செபெக்ஸ் 2 வெடிகுண்டால் ஏற்படும் பாதிப்பு 28% உயர்வாகவும், வெப்பம் 20% கூடுதலாகவும் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இதனை இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தின் வலிமை பன்மடங்கு உயர்வடையும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu