ஜப்பானில் பரவி வரும் அரிய வகை உயிர் பறிக்கும் பாக்டீரியா தொற்று

ஜப்பான் நாட்டில் அரிய வகை பாக்டீரியா தொற்று பரவி வருகிறது. இது நோயாளிகளின் உயிரை 48 மணி நேரத்தில் பறிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. Streptococcal Toxic Shock Syndrome என்ற நோய் பாதிப்பை அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா ஏற்படுத்துகிறது. ஜப்பானில் வேகமாக பரவி வரும் இந்த பாக்டீரியா, நீர் நிலைகளில் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. உடலில் உள்ள காயங்கள் அல்லது வெட்டுகள் வழியாக இது உடலுக்குள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தொண்டை […]

ஜப்பான் நாட்டில் அரிய வகை பாக்டீரியா தொற்று பரவி வருகிறது. இது நோயாளிகளின் உயிரை 48 மணி நேரத்தில் பறிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

Streptococcal Toxic Shock Syndrome என்ற நோய் பாதிப்பை அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா ஏற்படுத்துகிறது. ஜப்பானில் வேகமாக பரவி வரும் இந்த பாக்டீரியா, நீர் நிலைகளில் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. உடலில் உள்ள காயங்கள் அல்லது வெட்டுகள் வழியாக இது உடலுக்குள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தொண்டை அழற்சியில் தொடங்கி, தொண்டை புண், தொண்டை வீக்கம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. வயதானவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் போது, மூட்டு வலி, காய்ச்சல், ரத்த அழுத்தம், வீக்கம் போன்றவற்றில் ஆரம்பித்து, சுவாச பிரச்சனை, உறுப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு இறுதியில் உயிரைப் பறிக்கிறது. இதற்கான முறையான சிகிச்சை தீர்வு என்பது அறுவை சிகிச்சை மட்டுமே என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்ட உடல் பாகத்தை அகற்றுவதால் மற்ற உடல் பாகங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu