அசாமில் அரசு ஊழியர்களுக்கு பெற்றோர், மாமனார் மாமியாருடன் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாமில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல்வர் ஹிமந்த பிஷ்வா அரசு ஊழியர்களுக்கு பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவு செய்வதற்காக இரண்டு நாட்கள் சாதாரண விடுப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வயதான பெற்றோர் அல்லது மாமனார் மாமியார்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 7ஆம் தேதி சத் பூஜை விடுமுறை, நவம்பர் 9ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உடன் சிறப்பு விடுப்பு பெறலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.