கடந்த ஜூலை 10ஆம் தேதி 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
கடந்த ஜூலை பத்தாம் தேதி மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு,பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் சுமார் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவிற்கு கடும் போட்டியாக அமைந்த நிலையில் இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுகிறது.