ஸ்வீடிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி அடைந்துள்ளார்.
ஸ்வீடனில் ஸ்வீடிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதற் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகால் ஸ்வீடன் வீரர் எலியாஸ் ஒய்மெரை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனை அடுத்து நாளை மறுதினம் நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் மற்றும் அர்ஜென்டினா வீரர் மரியோனா நாவோன் மோத உள்ளனர்.














