சிலி நாட்டில் ரிக்டரில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவு

July 19, 2024

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரமான ஆண்டொபகஸ்தாவில் இருந்து கிழக்கே நோக்கி 265 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதன் ஆழம் 128 கிலோமீட்டர் ஆகும். நேற்று இரவு 9.51 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரமான ஆண்டொபகஸ்தாவில் இருந்து கிழக்கே நோக்கி 265 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதன் ஆழம் 128 கிலோமீட்டர் ஆகும். நேற்று இரவு 9.51 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் எவரேனும் பலியானதாக தகவல் எதுவும் வரவில்லை. சேத விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று செய்திகள் வந்துள்ளது. உலகிலேயே அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக சிலி உள்ளது. இங்கு அதிகப்படியான எரிமலை சீற்றங்கள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu