கர்நாடகாவில் நேற்று 60 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று 12 அரசு அதிகாரிகளின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றை திடீரென்று சோதனை நடத்தினர். இதில் பெங்களூர், பெங்களூரு புறநகர், சிவமோக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு அதிகாரிகளின் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், பணம், கார்களுடன் சேர்ந்த இருசக்கர வாகனங்கள் சொத்து பத்திரங்கள் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இவை தவிர கை துப்பாக்கி, உயர்தரக வகை கடிகாரங்கள், ஏர்கன் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 25 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.