உடல் ஆரோக்கியத்துக்கு தினசரி 5000க்கும் குறைவான அடிகள் நடப்பது போதுமானது - ஆய்வு தகவல்

பொதுவாக, நல்ல உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு தினமும் 10000 அடிகள் நடப்பது முக்கியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வில் 5000-க்கும் குறைவான அடிகள் போதுமானது என்று தெரிய வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரவுகள் படி, போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடைபயிற்சியின் நன்மைகள் குறித்து […]

பொதுவாக, நல்ல உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு தினமும் 10000 அடிகள் நடப்பது முக்கியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வில் 5000-க்கும் குறைவான அடிகள் போதுமானது என்று தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகள் படி, போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடைபயிற்சியின் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தன. சுமார் 226000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி, முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தை குறைக்க தினசரி 4000 அடிகள் நடப்பது போதுமானது என தெரிய வந்துள்ளது. மேலும், இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2300 அடிகள் போதுமானது. அத்துடன், 4000-க்கு மேல் நடக்கும் ஒவ்வொரு 1000 அடிகளும் இறப்பு அபாயத்தை 15% அளவுக்கு குறைக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu