மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு சரிந்து வந்த பங்கு சந்தை இன்று ஒரே நாளில் 1.7% அளவுக்கு ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1292.92 புள்ளிகள் உயர்ந்து 81332.72 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 428.75 புள்ளிகள் உயர்ந்து 24834.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், அதானி பவர், டாடா மோட்டார்ஸ், ஐ டி சி, டி சி எஸ், ரிலையன்ஸ், அசோக் லேலண்ட், இண்டஸ் டவர்ஸ், சிப்லா, டேவிஸ் லேப்ஸ், பேடிஎம், ஸ்ரீராம் பைனான்ஸ், அமரராஜா பேட்டரி, நியூ இந்தியா இன்சூரன்ஸ், வோடபோன், எஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, சுஸ்லான் எனர்ஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. மேன்கைண்ட் பார்மா, ரயில் விகாஸ் நிகாம் போன்ற சில நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.














