உலகின் காலநிலை மாற்றம் எதிர்பார்த்ததை விட வேகமாகவும், கணிக்க முடியாததாகவும் இருப்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) எனப்படும் நீரோட்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீரோட்டம் திடீரென நின்று போகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் உலகம் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நீரோட்ட மாற்றங்கள் எப்போது நிகழும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அடுத்த 6,000 ஆண்டுகளுக்குள் இது நிகழலாம் என்றும், அதற்கு முன்பே நிகழும் வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மனிதகுலம் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.














