ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் தற்போது லண்டனில் தற்காலிகமாக கூடி அனுமதி கேட்டுள்ளார். இங்கிலாந்து குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கேட்க முடியாது. அதனால் இங்கிலாந்து அவருடைய கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
அதையடுத்து அவர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் கோருவது குறித்து யோசித்து வந்தார். இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகாரப் போக்கு மற்றும் ஜனநாயகத்தின் மீதான கவலைகள் காரணமாக அமெரிக்கா விசா தடைகளை விதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.