சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் வெடித்தது

August 9, 2024

சீன துறைமுகம் ஒன்றில் சரக்கு கப்பல் வெடித்ததில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. சீனாவில் உள்ள நிங்போ ஜூஸான் துறைமுகத்தில் தைவான் நாட்டுக்கு சொந்தமான ஒய் எம் மொபிலிட்டி சரக்கு கப்பலில் தீப்பற்ற கூடிய பொருட்கள் இருந்துள்ளன. இந்நிலையில் இன்று மதியம் அந்த சரக்கு கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து கப்பலில் இருந்து பொருட்கள் வீசி எறியப்பட்டதுடன் பெரும் கரும்புகை கிளம்பியது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் […]

சீன துறைமுகம் ஒன்றில் சரக்கு கப்பல் வெடித்ததில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது.

சீனாவில் உள்ள நிங்போ ஜூஸான் துறைமுகத்தில் தைவான் நாட்டுக்கு சொந்தமான ஒய் எம் மொபிலிட்டி சரக்கு கப்பலில் தீப்பற்ற கூடிய பொருட்கள் இருந்துள்ளன. இந்நிலையில் இன்று மதியம் அந்த சரக்கு கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து கப்பலில் இருந்து பொருட்கள் வீசி எறியப்பட்டதுடன் பெரும் கரும்புகை கிளம்பியது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் துறைமுகத்திலிருந்த அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள், மேற்கூரை போன்றவை சேதமடைந்தன. விபத்து நடத்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் நில அதிர்வு ஏற்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu