மாருதி சுசுகி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது ஃப்ரான்க்ஸ் SUV களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. மாருதி சுசுகி நிறுவனம், இந்திய தயாரிப்பு SUV களை ஜப்பான் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
குஜராத்தில் உள்ள பாவ்பந்தர் துறைமுகத்திலிருந்து 1,600-க்கும் அதிகமான ஃப்ரான்க்ஸ் SUV களின் முதல் கப்பல் புறப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் மூலம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு பாலெனோவை ஏற்றுமதி செய்ததைத் தொடர்ந்து, மாருதி சுசுகிக்கு இது இரண்டாவது ஏற்றுமதியாகும். மாருதி சுசுகியின் மேலாண்மை இயக்குநர் ஹிசாஷி தகேச்சி, உலகத் தரம் வாய்ந்த வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிறுவனம் மாருதி சுசுகி என்பதற்கு இது சான்றாகும் என தெரிவித்துள்ளார். மேலும், 2023-24 நிதியாண்டில் 2.8 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 70,560 வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக கூறினார்.