தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டர்ன் சினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் பிரதமர் ஸ்ரெத்த தவசினை அந்நாட்டு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய பிரதமர் வேட்பாளரை ஆளுங்கட்சியான பியூ தாய் கட்சி தேர்வு செய்வதற்காக ஆலோசனையில் ஈடுபட்டது. இதில் முன்னாள் நீதித்துறை மந்திரி நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் சினவத்ரா ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். இவர்களில் சினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து அறிவித்தது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சினவத்ரா பெரும்பான்மையான வாக்குகளை பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெறுமையையும் பெற்றுள்ளார்.