ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்க நெறி நடவடிக்கைகள் குறித்து அறநெறி அமைச்சகத்தின் இயக்குனர் மோஹாலிஸ் தகவல் அளித்துள்ளார். அதில், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒழுக்கநெறி கெட்ட திரைப்பட சிடிக்களை விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.