இந்தியா அனைவரின் வளர்ச்சியை விரும்புகிறது - போலந்தில் மோடி பேச்சு

August 22, 2024

இந்தியா அனைவருடனும் இணைய விரும்புகிறது. அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது என போலந்தில் மோடி பேசினார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தலைநகர் வார்சாவில் உள்ள ஜான் சாஹிப் மகாராஜா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, எனக்கு அன்பான வரவேற்பு அளித்த போலந்து நாட்டு மக்களுக்கு நன்றி. இந்தியா அனைவருடனும் இணைய […]

இந்தியா அனைவருடனும் இணைய விரும்புகிறது. அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது என போலந்தில் மோடி பேசினார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தலைநகர் வார்சாவில் உள்ள ஜான் சாஹிப் மகாராஜா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, எனக்கு அன்பான வரவேற்பு அளித்த போலந்து நாட்டு மக்களுக்கு நன்றி. இந்தியா அனைவருடனும் இணைய விரும்புகிறது. அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. இந்தியாவின் புதிய கொள்கை அனைத்து நாடுகளுடன் நெருக்கத்தை போற்றுவதாகும். ஜாம் ஷாகிப் நினைவாக இளைஞர் செயல்திட்டத்தை இந்தியா தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவிற்கு வரவழைக்கப்படுவார்கள். இப்பகுதியில் நிரந்தர அமைதி இருப்பதை இந்தியா விரும்புகிறது. போர் தேவையில்லாதது. போருக்கான நேரம் இதுவல்ல. போரின்போது இந்திய மாணவர்களுக்கு போலந்து உதவியது. அதற்கு இந்தியா தலைவணங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu