ஒருங்கிணைந்த கடன் வழங்கல் தளம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடன் வழங்கல் துறையில் இது புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
“யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் (யுஎல்ஐ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளம், விவசாயம் மற்றும் MSME கள் போன்ற துறைகளுக்கு பயனளிக்கும் நிதித் தரவுகளுக்கான அணுகலை டிஜிட்டல் மயமாக்கும்” என்று சக்தி காந்த தாஸ் கூறினார். தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் குறித்த எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேசினார். கடந்த 2022ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.