சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவைப் பதிவு செய்ய 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட 'உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024'க்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கொள்கையின் படி, எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசுக்கு ஆதரவு காட்டும் வீடியோக்கள், போஸ்ட்கள், ட்வீட்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் எண்ணிக்கையின்பேராக 4 வகைகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். யூட்யூப் வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ்களுக்கு சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளில் ரூ.8 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். இந்த திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலும் வசிக்கும் பயனாளர்களுக்கு கிடைக்கும். மேலும், அரசுக்கு எதிரான மற்றும் ஆட்சேபனைக்குரிய செய்திகள் வெளியிடுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி. அரசு அறிவித்துள்ளது.