இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கோரண்டலோ மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலஅதிர்வு மையம் வழங்கிய தகவலின் அடிப்படையில், நிலநடுக்கம் அதிகாலை 2.51 மணிக்கு ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் கோரண்டலோ நகரத்துக்கு தென்மேற்கே 77 கி.மீ தொலைவில், கடற்பரப்பிற்குள் 132 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். மேலும் கடலில் அலைகள் அதிகமாக எழுந்துள்ளன. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் கிடையாது.