உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அறிக்கையின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் ஆறுகளில் நீர் வளம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. கடுமையான வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால், மிசிசிப்பி, அமேசான், கங்கை, மீகாங் போன்ற முக்கிய ஆறுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உலகின் பல பகுதிகளில் குடிநீர் கிடைப்பது கடினமாகும். மேலும், விவசாயம், தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளும் பெரிதும் பாதிக்கப்படும். WMO பொதுச்செயலாளர் செலஸ்ட் சவுலோ, இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார். நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். காலநிலை மாற்றம் காரணமாக நீர் சுழற்சி முறைகள் மாறுவதால், வருங்காலத்தில் நீர் பற்றாக்குறை பிரச்சனை மேலும் தீவிரமடையும் என WMO எச்சரித்துள்ளது.