உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ச்சியாக விற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம், பெர்க்ஷயர் $10 பில்லியனை திரட்டி உள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் நடந்த 14வது சுற்று விற்பனையிலேயே $383 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.
ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, 94 வயதான பஃபெட் தனது பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ந்து குறைத்து வருகிறார். இதன் காரணமாக, பங்கு விலையும் பாதிக்கப்பட்டுள்ளது. பங்கு விலை $39ஐ நெருங்கும் போதெல்லாம், பஃபெட்டின் விற்பனை வேகம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பெர்க்ஷயர் இன்னும் பாங்க் ஆப் அமெரிக்காவில் 10.1% பங்குகளை வைத்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் $31.4 பில்லியன் ஆகும்.