போர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

October 10, 2024

போர்ப்ஸ் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 108.3 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக 1 டிரில்லியன் […]

போர்ப்ஸ் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 108.3 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக 1 டிரில்லியன் டாலரை தாண்டி 1.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி, புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பதிவாகுதல் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு அதிகரித்தது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பிஎஸ்இ சென்செக்ஸ் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 58 பேரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu