இன்றைய வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தை முதலில் ஏற்றம் பெற்று பின்னர் சரிவடைந்தது. இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 0.17% ஏற்றத்திலும், தேசிய பங்குச்சந்தை 0.07% ஏற்றத்திலும் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 81611.41 புள்ளிகளாகவும் நிஃப்டி 24998.45 புள்ளிகளாகவும் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி பவர், டாடா ஸ்டீல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா கெமிக்கல்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட், டாடா டெலி சர்வீசஸ் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ரிலையன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஜொமாட்டோ, சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிவடைந்துள்ளன.